[Tamil] - தொல்காப்பியம்

[Tamil] - தொல்காப்பியம்

Narrated by:
Ramani
A free trial credit cannot be used on this title

Unabridged Audiobook

Ratings
Book
Narrator
Release Date
August 2023
Duration
4 hours 32 minutes
Summary
தொல்காப்பியம் என்பது இன்று கிடைக்கப்பெறும் மிக மூத்த தமிழ் இலக்கண நூலாகும். இது இலக்கிய வடிவிலிருக்கும் ஓர் இலக்கண நூலாகும். இந்நூலை இயற்றியவர் தொல்காப்பியர் என்று தொல்காப்பியப் பாயிரத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது. பழங்காலத்து நூலாக இருப்பினும் இன்றுவரை தமிழ் இலக்கண விதிகளுக்கு அடிப்படையான நூல் இதுவே.

தொல்காப்பியம் 1610 (483+463+664) நூற்பாக்களால் ஆனது. இதன் உள்ளடக்கம், எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என மூன்று அதிகாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதலாவது எழுத்ததிகாரம் தனிமொழியிலும், புணர்மொழியிலும் உள்ள எழுத்துகளைப் பற்றிக் கூறுகிறது. இரண்டாவது சொல்லதிகாரம் மொழித்தொடர் அமையும் பாங்கைச் சொல்கிறது. மூன்றாவது பொருளதிகாரம், எழுதப்படும் நூலிலுள்ள வாழ்க்கைப் பொருளையும் அப்பொருள் சொல்லப்பட்டுள்ள யாப்பு, அணி முதலான பாங்குகளையும் தமிழ்மரபையும் விளக்குகிறது.

எழுத்ததிகாரம்

நூல் மரபு மொழி மரபு  பிறப்பியல்  புணரியல் தொகை மரபு உருபியல் உயிர் மயங்கியல்  புள்ளி மயங்கியல்  குற்றியலுகரப் புணரியல் 

சொல்லதிகாரம்

கிளவியாக்கம் வேற்றுமை இயல் வேற்றுமை மயங்கியல் விளி மரபு பெயரியல் வினை இயல் இடையியல் உரியியல் எச்சவியல்

பொருளதிகாரம்

அகத்திணையியல் புறத்திணையியல் களவியல்  கற்பியல்  பொருளியல் மெய்ப்பாட்டியல் உவமவியல் செய்யுளியல் மரபியல்

தொல்காப்பியரைப் புலம் தொகுத்தோன் என்று தொல்காப்பியத்துக்குப் பாயிரம் தந்த பனம்பாரனார் குறிப்பிடுகிறார். புலம் என்னும் சொல் இலக்கணத்தைக் குறிக்கும். இலக்கணம் என்னும் சொல்லும் தூய தமிழ்ச்சொல்லே. இதனை இலக்கணம் - சொல்விளக்கம் என்னும் பகுதியில் காணலாம்.

தொல்காப்பிய நூற்பாக்கள் அனைத்தையும் ரமணியின் நேர்த்தியான வாசிப்பில் கேட்கலாம்.
Browse By Category
1 book added to cart
Subtotal
$8.95
View Cart