[Tamil] - வசன கவிதை

[Tamil] - வசன கவிதை

Written by:
Bharathiyar
Narrated by:
Ramani
A free trial credit cannot be used on this title

Unabridged Audiobook

Ratings
Book
Narrator
Release Date
April 2023
Duration
1 hour 2 minutes
Summary
வசன கவிதையை தமிழில் முதன்முதலாகத் தோற்றுவித்தவர் பாரதியார். வசன கவிதை என்பது உரை நடையின் சாயலோடு கூடிய வசனக் கவிதைகள். பாரதியின் வசன கவிதைகள் எளிமையானவை என்றாலும் அதில் கூறப்பட்டுள்ள செய்திகள் முழு வீச்சுடன் வெளிப்படுகின்றன. பாரதியின் வசன கவிதைகள் ஆறு பிரிவுகளாக அமைந்துள்ளன. காட்சி, ஞாயிறு, சக்தி, காற்று, கடல், ஜகத் சித்திரம், விடுதலை என்பன அவையாகும். 'காட்சி' இயற்கையின் அற்புதத்தை வர்ணிப்பது. இயற்கை வழிபாட்டு உணர்வுகளை வெளிப்படுத்துகிறது. உலகமே இனியது என்கிற கோட்பாட்டை விளக்கும் கவிதை. வாழ்வின் அச்சாணியாகிய ஐம்பூதங்களையும் இனிமையானவை என்கிறார். இறுதியில் சாதல் இனிது என்கிறார். 'ஞாயிறு' என்னும் கவிதை ஞாயிறு என்பது என்ன என்பது போன்ற தத்துவார்த்தமான கேள்விகளை அடுக்கிச் செல்கிறது. சுடுதலும் தாகமேற்படுத்துதலும் சோர்வு உண்டாக்குதலும் இறுதியில் இன்பம் விளைவிப்பதாக அமைகிறது என்கிறார். சக்தி உபாசகரான பாரதி அறிவுச்சுடர் பரவுவதற்காகக் கண்ட மந்திரச் சொல்லே சக்தி. சக்தி என்கிற வார்த்தையினை பாரதி இயற்கையின் ஆற்றலைக் குறிக்கவே பயன்படுத்துகிறார். இம்மகா சக்தியிடம் காவல் செய்ய, கவிதை செய்ய, பிறர்க்கு நன்மை தருவதற்கு அருள் வேண்டுகிறார். 'காற்று' என்ற பகுதியில் என்ன சொன்னாலும் சொன்னதைக் கேட்காத வீட்டின் செல்லக் குழந்தையிடம் பேசுவது போலக் காற்றிடம் பேசுகிறார். 'கடல்' என்கிற பகுதியில் கடலுக்கு மிகக் குறைந்த விண்ணப்பமாக எங்கள் தாபமெல்லாம் தீர்ந்து உலகம் தழைக்குமாறு இன்ப மழை பொழிதல் வேண்டும் என்று கேட்கிறார். 'ஜகத் சித்திரம்' என்ற நாடகம் ஐந்து காட்சிகளாக அமைகிறது. மனித மன இயல்புகளையும் அதனால் விளையும் துன்பங்களையும் உருவகமாகச் சொல்கிறது. 'விடுதலை' என்ற பகுதி இரண
1 book added to cart
Subtotal
$4.00
View Cart